6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

by Editor / 24-12-2024 10:15:07pm
6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பீகார் மாநில ஆளுநராகவும், மிசோரம் ஆளுநர் கம்பம்பதி ஹரிபாபு, ஒடிசா மாநில ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில ஆளுநராகவும் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் பல்லா, மணிப்பூர் ஆளுநராகவும், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மிசோரம் ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

Share via