முதல்வராக சித்தராமையா மே 20-ல் பதவியேற்பு

by Staff / 18-05-2023 11:37:54am
முதல்வராக சித்தராமையா மே 20-ல் பதவியேற்பு


கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மே 20ஆம் தேதி இருவரும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பெயரை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. முதல் 2 ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 3 ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 135 தொகுதியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

 

Tags :

Share via

More stories

Logo