மத்திய அரசு பணியில் சேரும் தமிழ் இளைஞர்களுக்காக புதிய இணையதளம்
மத்திய அரசு பணியில் சேரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு அமைப்பான டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தமிழக இளைஞர்கள் மட்டுமே சேரும் வகையில் தமிழ் தாள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த தமிழ் தாளில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டுமே அடுத்த சுற்று தேர்வுக்கு செல்ல முடியும் என்பதால் கிட்டத்தட்ட 99% தமிழ் இளைஞர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணிகள் கிடைக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சியை அடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உள்ள அறிவிக்கப்பட்டுள்ள பணிகளிலும் தமிழ் இளைஞர்கள் அதிகமாக பணியில் சேர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 3261 காலி பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்ய ஏதுவாக போட்டித்தேர்வுக்கான அனைத்து பாடங்களும் இடம் பெறும் வகையில் இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இந்த இணையத்தளத்தில் அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த இணையதளத்தை தமிழ் இளைஞர்கள் அணுகி யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. தமிழ் இளைஞர்கள் மத்திய அரசு தேர்வாணையத்தின் அதிக அளவில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் நல்ல நோக்கத்திற்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த இணைய தளத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags :