என் சொத்துக்களை விற்றேன் நடிகர் அர்ஜூன்

by Editor / 29-09-2021 06:15:01pm
என் சொத்துக்களை விற்றேன் நடிகர் அர்ஜூன்

 

நடிகர் அர்ஜூன் நடத்தும் நிகழ்ச்சி சர்வைவர். இதுவும் பிக்பாஸ் போலத்தான். ஆனால், வீட்டில் அடைக்கமல் ஒரு தீவில் போட்டியாளர்களை விடுவார்கள். அங்கு அவர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்படும்.முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக தரப்படும்.


தமிழில் ஜீ தமிழில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை விஜயலட்சுமி, நடிகை விக்ராந்த், நடிகர் நந்தா, நடிகர் பெசன்ட்ரவி, நடிகர் உமாபதி, நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி உள்ளிட்ட சிலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளனர்.புதிதாக  வெளியான இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் அடுத்த கேப்டனை தேர்ந்தெடுக்கும் அந்த டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. மணல் மூட்டை ஏற்றப்பட்ட கட்டையை தோள் மீது தாங்கி நிற்க வேண்டும்.


 இது கடினமான டாஸ்க் என அர்ஜூனே சொல்கிறார். அப்போது அங்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அர்ஜூன் பதறி ஓடுகிறார்.அதேபோல், இன்றைய புரமோவும் வெளியாகியுள்ளது. அதில், அர்ஜூன் திரைவாழ்வில் தான் பட்ட கஷ்டங்களை கூறுகிறார். தன் படங்கள் தோல்வியை சந்தித்த போது நானே தயாரிப்பாளராக மாறினேன். படத்தை தயாரிக்க என் சொத்துக்கள் அனைத்தையும் விற்றேன் என அவர் பேசும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via