அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி செலுத்தி வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அதிகமான கடன்களை பெற்று திணறுவதாக எதிர்க்கட்சி தரப்பில் இருந்து கூறப்பட்டதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். இந்தக் கருத்தின் பின்னணியில், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் கடன் தொகை 128% உயர்ந்தது, ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் அது 93% ஆகக் குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் பெறப்பட்ட கடன்கள் பற்றிய விவரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags :



















