பேரவை நிகழ்வுகள் - 14 முக்கிய பிரமுகர்கள் பார்வை

by Staff / 09-10-2023 11:18:21am
பேரவை நிகழ்வுகள் - 14 முக்கிய பிரமுகர்கள் பார்வை

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை 14 முக்கிய பிரமுகர்கள் இன்று பார்வையிடுகின்றனர். ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட 14 முக்கிய பிரமுகர்கள் பார்வையிடுகின்றனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. காவிரி நீரை திறந்து விடக்கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை தர கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo