வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு சீல்

by Staff / 01-02-2023 02:43:39pm
வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு சீல்

அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், பேரூராட்சிக்கு சொந்தமான 33 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.இதில், 19 கடைகள், கடந்த ஒரு வருடமாக முறையாக வாடகை செலுத்தவில்லை. அதனால், இதுகுறித்து பேரூராட்சி சார்பாக, வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த, பலமுறை 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று, பேரூராட்சி ஊழியர்கள் மூலம், வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories