காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து

by Staff / 09-10-2023 11:26:29am
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து

கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக் - கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு, நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “ பாஜக படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது மற்றும் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்து, அதனை யூனியன் பிரதேசங்களாக மாற்றியது, ஆகிய பாஜகவின் நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக எதிர்த்துள்ளார்கள் என்பதைதான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டாலும், இதே முடிவுகள்தான் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via