குரு பெயா்ச்சி - கடகம்

by Admin / 17-11-2021 03:52:00pm
குரு பெயா்ச்சி - கடகம்


கடக ராசிக்கு சப்தம ஸ்தானம் ஏழாம் வீட்டில் இருந்த குரு ,இப்பொழுது எட்டாம் வீடான கும்ப ராசி க்கு இடம் பெயர்கிறார்.இது வரை பல்வேறு நன்மைகளை வழங்கி வந்த குரு ,இப்பொழுது கவனமுடன் வாழ வழிகாட்டுவார்.இந்த காலம் உங்களுக்கு நன்மையும்  தீமையும் கலந்தே வரும்.எதிலும் அவசரப்பட்டு இறங்க வேண்டாம் ஒரு முறைக்கு பல முறை யோசித்தே முடிவு எடுக்க வேண்டும்.புதியவற்றில் முதலீடு  செய்வதை தவிர்க்கவும்.தேவையற்றதில் மனம் சொல்லும் .மனதை கட்டு படுத்த வேண்டும் இல்லையெனில் அமைதியான வாழக்கை  அவதிக்கு உள்ளாகிவிட்டதே என்று அவஸ்தைபட நேரிடும்.உங்கள் நிலையை விட்டு இறங்கி பழகுவதை தவிருங்கள்.அடுத்தவர்களுடன் குடும்ப விசயங்களை பகிராதீர்கள்.எதிலும் எச்சரிகையுடன் இருப்பது நல்லது.மனம் தவறான செயல்கள் மீது நாட்டத்தை உருவாக்கும் கவனம்.நற்பலன்கள் குறைவாக இருப்பதால்மொத்தில் கவனமுடனிருந்தால் கண்ணிய வாழ்வுக்கு பாதகமில்லை.

 

Tags :

Share via