கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1 - செங்கோட்டையன் பரபரப்பு.

by Staff / 01-11-2025 04:20:42pm
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1 - செங்கோட்டையன் பரபரப்பு.

துரோகம் என்று சொன்னாலே, அதற்கான நோபல் பரிசை எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்" -   

1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன்.

பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன்.

கட்சி உடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், எனக்கு 2 முறை வந்த வாய்ப்புகளைக் கூட விட்டுக் கொடுத்தேன்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான். 

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன்.

தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான்.

கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்.

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1 - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி.

 

Tags : கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1 - செங்கோட்டையன் பரபரப்பு

Share via