பிடிஆர் ஆடியோ விவகாரம் - வழக்கு தள்ளுபடி

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதுதொடர்பான விசாரணையின்போது, ஆடியோ மீது நடவடிக்கை எடுப்பதற்கான என்ன ஆதாரம் உள்ளது என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேள்வி எழுப்பினார். போலியான அபத்தமான அரசியல் உள்நோக்கம் கொண்ட மனுக்களை எடுத்து வராதீர்கள் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
Tags :