தமிழக சபாநாயகர் கேரள முதல்வருடன் திடீர் சந்திப்பு
தமிழக சபாநாயகர் அப்பாவு நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கேரள தலைநகர் திருவனந்தபுரம் சென்றுள்ளார். இந்த நிலையில் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சபாநாயகர் அப்பாவு சந்திந்தார். அப்போது மரியாதை நிமித்தமாக முக்கியஸ்தர்கள் அறையில் சந்தித்து சிறிது நேரம் உரையாடினர். கேரள முதல்வருக்கும், தமிழக முதல்வருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. கேரளாவில் நடந்த சில நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு கலந்து கொண்டிருந்தார்.
Tags :