ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய... ஓ .பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியின் சின்னத்தில் வாக்களிக்குமாறு உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தீவிர பரப்பரை மேற்கொண்டார். போடிநாயக்கனூரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஓ .பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியின் சின்னத்தில் வாக்களிக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். .தனது உரையின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை உதயநிதி கடுமையாக விமர்சித்தார் ஓபிஎஸ் எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் அவர் பேசியதோடு கடந்த முறை அவர் போட்டியிட்டபோது திமுக வேட்பாளரை பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தை தோல்வி அடையச் செய்தார் .ஆனால், அண்ணன் இன்று திமுக வேட்பாளராக நிற்பதால் அவரை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கூட்டத்தை பார்த்து ,,, செய்வீர்களா' என்று கேட்டதற்கு அவர்கள் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம் என்று மறு குரல் எழுப்பினர்.
Tags :



















