அடுத்த மாதம் 22 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்

by Editor / 15-10-2021 09:00:05am
அடுத்த மாதம் 22 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்

குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22 ஆம் தேதி துவக்கி, டிசம்பர் 23 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே நவம்வர் 15 ஆம் தேதி கூட்டம் துவங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முன்பு போல தீவிரமாக இல்லாத காரணத்தால் உறுப்பினர்கள் பரிசோதனை சான்றிதழ் இன்றி சபைக்கு வர அனுமதிக்கப்படுவர் என தெரிகிறது.

மழைக்கால கூட்டத் தொடரின் போது அமளியால் சபை நடவடிக்கையை முடக்கியதை போல, குளிர்கால கூட்டத் தொடரையும் முடக்க திரிணமுல் காங்கிரஸ், மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo