நடிகர் சூரி உணவகத்தில் ரெய்டு: அமைச்சர் விளக்கம்

மதுரை அருகே ஒத்தக்கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் சூரி எனது தொகுதிக்காரர் என்னுடைய நல்ல நண்பர். அவரது உணவகத்தில் திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையிடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளவில்லை. வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
Tags :