காவல்துறை என்னிடம் விசாரணை நடத்தவில்லை.. நெல்சன்

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என இயக்குநர் நெல்சன் கூறியுள்ளார். மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு தனது வீட்டுக்கு வந்து எந்த போலீஸும் தனக்கு சம்மன் கொடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதுவரை காவல்துறையிலிருந்து என் வாழ்நாளில் எந்த ஒரு தொலைபேசியிலோ அல்லது நேரிலோ அழைப்பு வந்ததே இல்லை எனவும், காவல்துறையின் எந்த அதிகாரியிடம் எனது இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது என நெல்சன் தெரிவித்துள்ளார்.
Tags :