விசாரணை என்ற பெயரில் தாக்கிய போலீசாருக்கு ரூ.4 லட்சம் அபராதம்

திருநெல்வேலியைச் சேர்ந்த சந்திரா என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரை கடுமையாக தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக காவலர் மகாராஜன், உதவி ஆய்வாளர் விமலன் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில், இருவரிடமும் இருந்து தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் இழப்பீட்டு பெற்று, பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :