என்கவுண்டர் - இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு - காஷ்மீர்: கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுண்டரில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச்சண்டையில் வீரமரணம் அடைந்தார். சிங்போரா சத்ரூ பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராணுவ வீரர் கெய்கர் சந்தீப் பாண்டுரங் வீரமரணம் அடைந்தார். மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த 2 இந்திய ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :