தெரியுமா உங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் உங்களுக்கு இலவச சட்ட உதவி.
இலவச சட்ட உதவி பெற 15100
தெரியுமா உங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் உங்களுக்கு இலவச சட்ட உதவியை இந்திய நீதித்துறை செய்கிறது பயன்படுத்த எளிய வழி
இலவச தொலைபேசி எண் 15100 அழைக்கவும்
பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும்
காத்திருக்க வேண்டும் அல்லது
அவசர உதவி என்றால் எமர்ஜென்சி என்று சொல்லுங்கள் அல்லது எண் 1 டைப் செய்ய வேண்டும்.
காத்திருந்த நிலையில் உங்களுக்கு மீண்டும் பதிவு செய்த குரல் கேட்கும்
தமிழில் தொடர எண் 1
மற்ற மொழி என்றால் எண் 2
டைப் செய்ய வேண்டும்.
மொழி தேர்வு செய்த பிறகு
1
2
3
4
என்று உங்களுக்கு என்ன வகையான உதவி தேவை என்று பட்டியல் சொல்லும்
உங்களுக்கு தேவையான விருப்பம் தேர்வு செய்து டைப் செய்தால் உங்களுக்கு உதவி வழிக்காட்டுதல் கிடைக்கும். கூடுதலாக உங்களுக்கு வக்கீல் வைத்து கேஸ் நடத்தி தீர்ப்பு வரை இலவசமாக வாங்கி கொடுக்கிறது இந்திய நீதித்துறை.
உங்களுடைய கோரிக்கை பதிவு செய்யப்பட்டு எண் வழங்கப்படும் மீண்டும் உங்கள் கோரிக்கை எண் மூலம் உங்கள் கோரிக்கையின் தற்போதைய நிலையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
உள்ளூர் பிரச்சினை முதல் உச்ச நீதிமன்ற உதவி வரை இலவச போனில் இலவச ஆலோசனை மட்டும் அல்லாமல் இலவச வக்கீல் வரை சட்ட உதவிகள் யாவும் உங்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாகவே கிடைக்கும்
அவசர உதவி என்றால் எமர்ஜென்சி என்று சொல்லுங்கள் அல்லது எண் 1 டைப் செய்த நிலையில் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்னர் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சட்ட வல்லுநர்கள் உங்களை தொடர்புக் கொள்வார்கள் அநேகமாக ஒரு வேலை நாள் ஆகலாம் அவசர தேவை என்பதால் ஒரு நாளில் உங்களை அவர்களே தொடர்புக் கொள்வார்கள். நீதிமன்ற விடுமுறை நாட்களில் காலதாமதம் ஏற்படும் ஆனால் நிச்சயமாக அழைப்பார்கள்
உங்களுடைய சட்ட உதவி செய்ய நீதிமன்றம் மூலம் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் வழக்கறிஞர்கள் கட்டணத்தை தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டு உங்களுக்கு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். உங்களுக்கு தான் இலவச சேவை உங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு உரிய கட்டணத்தை நீதி துறையே செலுத்தி விடுகிறது. உங்களுக்கு லாபம் வக்கீலுக்கும் வருமானம்.
சமூக ஆர்வலர்கள் நிறைய பேர் நல்ல முறையில் பயன்பெற்று உள்ளார்கள்
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சட்ட வல்லுநர்களிடம் வம்படிக்காமல் சண்டை இழுக்காமல் உங்களை வெற்றி பெற வைக்க நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் உங்கள் இலவச சட்ட உதவியை நீதித்துறை செய்கிறது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
1. உங்களிடம் பேச
2. ஆலோசனை பெற
3. சட்ட ஆலோசனை பெற
4. வழக்கு போட
5. வழக்கு எதிர் நடத்த
6. நீதிமன்றம் செல்ல
7. சமரசமாக தீர்வு காண
8. நீதிமன்றத்திற்கு வெளியே பைசல் செய்ய
9. கூடுதல் சட்ட உதவிகள்
பொது நலனுக்காக போராடிக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் எங்களை சொந்த பிரச்சினைகளுக்கு பத்து ரூபாய் இயக்கம் உதவி செய்யவதில்லை என்று திட்டுகின்ற நண்பர்கள் இந்த பயனுள்ள பாதுகாப்பான நல்ல தரமான இலவச சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
Tags : தெரியுமா உங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் உங்களுக்கு இலவச சட்ட உதவி