தட்கல் டிக்கெட்டுக்கு எதிரான வழக்கு - விசாரிக்க மறுப்பு

தட்கல் டிக்கெட்டுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தட்கல் ரயில் டிக்கெட் பதிவு முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை
விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ள நீதிமன்றம் பொதுவாக பொருளாதாரம் சார்ந்த அரசின்
கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. முன்னதாக தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை IRCTC உறுதிப்படுத்தியிருந்தது.
Tags :