நான் கொடுத்ததைத்திருப்பிக்கொடு-திமுக பிரமுகர் அடாவடி இணையத்தில் வைரல் வீடியோ.

by Editor / 29-10-2022 07:48:49am
நான் கொடுத்ததைத்திருப்பிக்கொடு-திமுக பிரமுகர் அடாவடி  இணையத்தில் வைரல் வீடியோ.

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சகாய வினோ. இவர் கன்னியாகுமரி வடக்கு தெருவை சார்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி இன்பம் என்பவரது விசைப்படகில் டிரைவராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலுக்கு செல்லும்போது படகில் வைத்து நிலைதடுமாறி விழுந்ததில் சகாய வினோவிற்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் திமுக ஒன்றிய பிரதிநிதி இன்பம் கொடுத்த முன் பணத்தை திருப்பி கேட்டு தனது கூட்டாளிகளுடன், சகாய வினோ வீட்டிற்கு சென்று தாக்குதல் நட்த்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo