கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசியல், இலக்கியம், சமுதாய பணிகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையையும் வளர்த்தெடுக்க கருணாநிதி அரும்பணியாற்றியுள்ளார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
Tags : கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம்