வேட்கையை விதைத்தவர்" தீரனை நினைவுகூர்ந்த தவெக விஜய்

தீரன் சின்னமலையின் தியாகத்தைப்போற்றி வணங்குவோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மறைந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269 வது பிறந்தநாளையொட்டி விஜய் தனது நினைவுகூரல் தொடர்பான கருத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அவரின் பதிவில், "தாய்மண்ணை மீட்க அசத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர், இறுதி மூச்சுவரை விடுதலைக்காக போராடி தூக்கு மேடை ஏறி விடுதலை வேட்கையை விதைத்த வீரர்" என தெரிவித்துள்ளார்.
Tags :