ரூ.2,500 கோடியில் தனியார் நிறுவனத்தின் தகவல் தரவு மையம்

by Editor / 12-09-2021 12:09:00pm
ரூ.2,500 கோடியில் தனியார் நிறுவனத்தின் தகவல் தரவு மையம்

சென்னை அம்பத்தூரில் ரூ.2500 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்த தகவல் தரவு மையத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டத்தில், 50 மெகா வாட் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 160 தகவல் தரவு மையங்களை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, முதலமைச்சர் முன்னிலையில் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த DP World குழுமம் தமிழ்நாட்டில் ரூ.2000 கோடி முதலீட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரம்பத்தூர், சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் சிறுதுறைமுகம், குளிப்பதன கிடங்கு, தகவல் தரவு மையம் உள்ளிட்டவற்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via