by Staff /
27-06-2023
04:09:46pm
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், பெயிண்டர். இவருக்கு பென் என்ற மகனும், ஈவிலின் ஜாய் (வயது 16) என்ற மகளும் உள்ளனர். தற்போது சுரேஷ், குடும்பத்தினருடன் களியக்காவிளை அருகே உள்ள தையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பளுகல் அருகே மத்தம்பாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பென் 12-ம் வகுப்பும், ஈவிலின் ஜாய் 10-ம் வகுப்பும் படித்தனர். இவர்கள் 2 பேரும் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் இன்று காலை ஈவிலின் ஜாய், பள்ளியில் ஸ்பெசல் வகுப்பு உள்ளதாக வீட்டில் கூறி விட்டு தனியாக பள்ளிக்கு சென்றுள்ளார்.<br />
இதற்கிடையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவரது சகோதரன் பென், தங்கையை பார்க்கச்சென்றபோது, அவர் பள்ளிக்கு வரவில்லை என தகவல் கிடைத்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த நேரத்தில், பள்ளி நிர்வாகத்துக்கு ரெயில்வே போலீசிடம் இருந்து, உங்கள் பள்ளியின் சீருடை அணிந்த மாணவி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது, தற்கொலை செய்தது ஈவிலின் ஜாய் என தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் தெரியவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via