by Staff /
27-06-2023
05:27:32pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா உணவகங்களில் ஒரு உணவகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் உணவின் தரம், அம்மாவின் அரசில் இருந்ததுபோல் நிறைவாக இல்லை. இதன் காரணமாக, இரவு வரை எப்போதும் பரபரப்பாக இருந்த அம்மா உணவகங்கள் தற்போது பகுதியளவு மட்டுமே செயல்படுகிறது. உணவுப் பொருட்கள் வழங்குவது 90 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. விடியா திமுக அரசு அம்மா உணவகங்களை மூட முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
Tags :
Share via