பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வசித்து வருபவர் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார். இவர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது இருக்கையில் ஆபாசமாக அமர்ந்திருக்கிறார். இதனை மருத்துவர் கண்டித்திருக்கிறார். இதனால் அவரை ஆபாசமாக மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் செல்போனில் அவரிடம் ஆபாசமாக பேசிய அவர் உன் புகைப்படத்தை மார்பிங் செய்து என் செல்போனில் வைத்திருக்கிறேன். எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :



















