மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் மீது வழக்குப்பதிவு:-

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக கடந்த மாதம் சேந்தங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் உறவினர் தர்மராஜ் என்பவர் மீது புகார் அளித்து ஒரு பகுதி பணம் மற்றும் நகையை பெற்ற நிலையில், இரு தரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். இந்த நிலையில் உடனடியாக தனக்கு பணத்தை பெற்று தரவில்லை என்று கூறி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நேற்று கலைச்செல்வன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காவல் நிலையம் உள்ளே ஓடியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ராஜா தீயை அணைத்து காப்பாற்றிய போது ராஜாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நெருப்பை பற்ற வைத்து மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக கலைச்செல்வன் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags : மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் மீது வழக்குப்பதிவு:-