மதுரை சித்திரைத் திருவிழா:நெல்லை பக்தர் உள்ளிட்ட 2பேர் பலி.

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது வைகை ஆற்றில் இருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த சிவில் இன்ஜினீயர் பூமிநாதன் (45) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அதேபோல், சிம்மக்கல் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி கண்ணன் (43) என்பவர் உயிரிழந்தார்.
Tags : மதுரை சித்திரைத் திருவிழா.:நெல்லை பக்தர் உள்ளிட்ட 2பேர் பலி