மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்..

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா சித்ரா பௌர்ணமி நாளான இன்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளவுள்ளார்
மதுரை தல்லாகுளம் பகுதியில் விடிய விடிய நடைபெறும் எதிர்சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சர்க்கரை தீபம் ஏந்தி தரிசனம் செய்துவருகின்றனர்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் அதிகளவிலான பக்தர்கள் குவிந்தனர்.
மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள வரும் கள்ளழகருக்கு 5, ரூபாய் நாணயம் மாலை 7 அடி உயர்த்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள வரும் கள்ளழகர் மற்றும் விரராகவ பெருமாளுக்கு சம்மங்கி மற்றும் விருச்சிக பூ மற்றும் தாமரை சேர்த்து அலங்கார மாலை அணிவிக்கபட்டது.
இந்த மாலை இந்து அறநிலைத்துறை மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்து அறநிலைத்துறை அமைச்சர்க்கு வெட்டிவேர் மாலை, அணிவிக்கப்பட்டது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது ஐந்து ரூபாய் நாணயத்தால் உருவாக்கப்பட்டுள்ள மாலை அணிவிக்கப்பட்டது.தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பின்பாக வெட்டிவேர் சப்பரம் மற்றும் ஆயிரம்பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார் - இதனை தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றை நோக்கி புறப்பட்டார் - வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா.. கோவிந்தா.... கோஷங்கள் வின் அதிர எழுப்பி சர்க்கரை தீபமேற்றி வழிப்பட்டனர்.
Tags : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்..