தந்தை மீது புகார் கொடுத்த 13 வயது மகன்

வேலூரை சேர்ந்த ஜாபர் அவரது மனைவி பரானாவை குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து பரானா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மனவேதனை அடைந்த அவர்களது 13 வயது மகன், சைக்கிளில் குடியாத்தம் நகர காவல்நிலையத்திற்கு சென்று தன் தந்தை மீது புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :