திரையரங்கு ஊழியரை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய இரண்டு பேர்
புதுச்சேரியில் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்ததை சுட்டிக்காட்டி கிண்டலடித்த நபரை அவரது நண்பர்கள் இரண்டுபேர் பொதுவெளியில் வைத்து கத்தியால் வெட்டினர். சண்முகா திரையரங்கில் கேண்டீன் பொறுப்பாளராக பணியாற்றி வந்த ரஞ்சித் என்பவரை திரையரங்கு வாசலில் வைத்து இரண்டு பேரும் துரத்தி துரத்தி அடித்து கத்தியால் வெட்டினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ரஞ்சித்தின் நண்பர்கள் என்பதும் சில மாதங்களுக்குமுன் திருட்டு வழக்கில் சிறை சென்ற ரஞ்சித் அக்கம்பக்கத்தினரிடம் கூறிக் கிண்டலடித்தாக அவரை மிரட்டுவதற்காக கத்தியால் வெட்டிய தாகவும் கூறியுள்ளான்.
Tags :