தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று அச்சுறுத்தல்.

by Editor / 26-06-2022 09:10:22am
தமிழகத்தில்  அதிகரிக்கும் கொரோனா தொற்று அச்சுறுத்தல்.

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனா தோற்று கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றாமல் இருப்பதின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் அதிகாரிக்கத்தொடங்கியுள்ளது.  இதன் காரணமாக கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த,தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும்  ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு வீடுகளில் கூடுவதற்கு மீண்டும் கொரோனா  கட்டுப்பாடுகளை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தி வருவதால், மீண்டும் மாநிலம் முழுதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமோ..? என்ற எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி மக்களின் மக்களிடம் எழுந்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படியும்,  மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பரவல் அச்சுறுத்தி வருவதால் அதனை கட்டுப்படுத்திட மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாததால்  கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தமிழகத்தில் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags : Corona infection on the rise in Tamil Nadu .. "Lockdown" again ..?

Share via