சோனியா காந்திக்கு மீண்டும் உடல்நலக்குறைவு

by Staff / 03-09-2023 12:41:03pm
சோனியா காந்திக்கு மீண்டும் உடல்நலக்குறைவு

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தினம் மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் 3வது கூட்டத்தில் சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

 

Tags :

Share via