அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் அஜித் மெல்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெல்லை பாபநாசம் நெடுஞ்சாலியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது அதி வேகமாக வந்த மன் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியதால் நடத்துனர் அஜித் மெல்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுனர் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். பயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவமனைக்குநேரில் சென்று ஆறுதல் கூறினார்.
Tags :















