திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்

சென்னை மெரினா சாலையில் இன்று சென்றுகொண்டிருந்த காரில் திடீரென புகை கிளம்பியுள்ளது. பின்னர், சற்று நேரத்தில் காரில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டிநர் காரை நிறுத்திவிட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல் துறையினர் சரிசெய்தனர்.
Tags :