பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலை மீட்பு தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் விசாரணை.

திருநெல்வேலி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பல கோடி மதிப்புள்ள சாமி சிலை வெளிநாடுக்கு கடத்த இருப்பதாகவும், அந்த கடத்தல் கும்பல் தூத்துக்குடியில் உள்ள ஒரு குடோனில் பதுங்கி இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.இதனால் இன்ஸ்பெக்டர் வனிதாராணி தலைமையிலான போலீசார் அடங்கிய குழுவினர் தூத்துக்குடியில் உள்ள ஒரு குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 வாலிபர்கள் ஒரு சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டு இருந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து நெல்லையில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து சிலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி, மேட்டூர், சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில் ஒருவர் தி.மு.க. பிரமுகர் ஆவார்.அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலை 2அடி உயரம் உள்ள ஒரு சாமி சிலை என்பது தெரியவந்தது.இந்த கும்பல் பழங்காலத்தை சேர்ந்த கோவிலில் இருந்து சாமி சிலையை கடத்தி வந்து வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந்த சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து நால்வரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags : பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலை மீட்பு தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் விசாரணை.