இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

by Editor / 10-09-2022 12:12:47pm
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் உள்ளது. அங்குள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால், அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கம் 6.2 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்தோனோஷிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. 2 நிலநடுக்கங்களும் 15 கிமீ (9.3 மைல்) ஆழத்தில் அபேபுரா நகரத்திலிருந்து 272 கிமீ தொலைவில் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.
 

 

Tags :

Share via