இன்று நிழலில்லா நாள்
ஆண்டுதோறும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும் "நிழலில்லா நாள்" இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று நிகழ்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஓசூரில் காணலாம். சென்னை கோட்டூர்புரம், பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags :