6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்

by Editor / 18-08-2021 09:59:47am
6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்

 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இருக்கும் நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கம்ப்யூட்டர் அறிவை ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நோக்கத்தில் ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடங்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன

ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் திடீரென ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் இந்த ஆண்டே இந்த பாடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

 

Tags :

Share via