ஆம்னிபேரூந்துக்கள் தடையை மீற முயற்சியா,,?

by Editor / 24-01-2024 05:19:22pm
ஆம்னிபேரூந்துக்கள் தடையை மீற முயற்சியா,,?

ஆம்னி பேருந்துகள் இன்று முதல் பயணிகளுடன் சென்னைக்குள் நுழைய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை மீறி கோயம்பேட்டில் இருந்து புறப்பட ஆம்னி பேருந்துகள் ஆயத்தமாகியுள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மட்டுமே இன்று முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை மீறி பேருந்துகளை இயக்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்நிலையில், ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் எனவும் மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்தது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல மாநகரப் பகுதிக்குள் இயக்கப்பட்டு வருகிறது. தை பூசம் , குடியரசு தினம் என அடுத்தடுத்து விடுமுறைகள் வரவிருக்கும் நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், சென்னை புறநகரில் முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க போதிய இட வசதி அளிக்கும் வரை தொடர்ந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசின் அறிவிப்புகளையும் தாண்டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

ஆம்னி பேரூந்து உரிமையாளர்களின்போராட்ட முடிவு அரசு அறிவிப்புக்கு எதிராக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Tags : ஆம்னிபேரூந்துக்கள் தடையை மீற முயற்சியா,,?

Share via