பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் - தே.மு.தி.க.

பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் - தே.மு.தி.க.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*தமிழக அரசு ஆண்டு தோறும் தை பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
பயிர்சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
* தமிழகத்தில் ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.
* ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும்.
* பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* முல்லை பெரியாறு அணையை கேரள அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் 152 அடியாக உயர்த்த வழி செய்ய வேண்டும்
Tags :