தூய பரலோக மாதா விண்ணேற்பு திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

by Admin / 30-07-2024 11:47:48pm
 தூய பரலோக மாதா விண்ணேற்பு திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் , காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா விண்ணேற்பு திருவிழா வருகின்ற 6 ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15  ம் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விண்ணரசி திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. 

பரலோக மாதா பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு அந்தோணி குரூஸ் அடிகளார் அனைவரையும் வரவேற்றார். 

கோவில்பட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். வருவாய்த்துறை ஆய்வாளர்  செல்ல பாண்டியன், காவல்துறை சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, போக்குவரத்து ஆய்வாளர் செல்வகுமார், உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் பேசும்போது காமநாயக்கன்பட்டி திருவிழா நான் இங்கு பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து நல்ல முறையில் நடந்து வருகிறது. 

ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் அதிகம் கூடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதற்காக 2022 ஆம் ஆண்டு நான் பொறுப்பேற்ற போது எனது முதல் மிகப்பெரிய திருவிழாவாக இந்த திருவிழா அமைந்தது. ஆகவே 150 காவலர்களைக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தேன். சென்ற முறை அதிக கூட்டம் இருந்ததால் 300க்கும் மேற்பட்ட காவலர்களை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தோம்.

ஆனால் இப்பொழுது பசிலிக்கா ஆகிவிட்டதால் இந்த ஆண்டு அதிகமாக மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது மேலும் பக்தர்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிந்து காவல்துறை மூலம் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 

 தூய பரலோக மாதா விண்ணேற்பு திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
 

Tags :

Share via