ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை - தமிழிசை விளக்கம்
ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி இருந்தார். இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் என்றும் அப்போது தனது தந்தை குமரி ஆனந்தன் எம்எல்ஏவாக இருந்தார் என்றும் அவர் தான் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது புத்தகங்களை தூக்கி எறிந்த போது தடுத்ததாகவும் அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
Tags :