தூத்துக்குடி ,சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொடுரகொலை வழக்கில் ஒன்பது காவலர்களுக்கும் தூக்கு தண்டனை
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் 2020 -ஆம் ஆண்டு தந்தை மகன் காவல் மரண வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் ,பாலகிருஷ்ணன் உள்பட ஒன்பது காவலர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஜி. முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து எவ்வித குற்ற பின்னணியும் இல்லாத இருவரை கொடூரமாக தாக்கி உயிர் இழக்க செய்ததை அறிதிலும் அரிதான வழக்கு என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர், இத்தகைய குற்றங்களை மீண்டும் செய்ய துணிய கூடாது என்பதற்காகவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பயம் வர வேண்டும் என்பதற்காகவும் இந்த உச்சபட்ச தண்டனையை வழங்கப்படுவாளாக தீர்ப்பில் வலியுறுத்து சொல்லி உள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒன்பது காவலர்களும் இணைந்து மொத்தம் 1.40 கோடி இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :


















