ஓடும் ரயிலில் ஸ்டண்ட் செய்த இளைஞன்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இளைஞன் ஒருவன் ரயிலில் சாகசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. வேகமாகச் செல்லும் ரயிலின் ஜன்னலுக்கு வெளியே ஒரு இளைஞன் தொங்கியபடி சாகசம் செய்து கொண்டிருந்துள்ளார். அந்த நபர் ரயிலின் உள்ள ஜன்னல் கம்பியைப் பிடித்த படியே இருந்துள்ளார். அந்த ரயில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், யாரோ ஒருவர் அவசரக்கால சங்கிலியைச் சரியான நேரத்தில் இழுத்து அவரை காப்பற்றியுள்ளனர். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :