தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகை ஷோபனா..

by Staff / 28-02-2024 01:38:12pm
தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகை ஷோபனா..

2024 மக்களவை தேர்தலில் இந்த முறை, பாஜக சார்பில் கேரளாவில் முன்னணி நடிகர், நடிகைகள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் சுரேஷ் கோபி, உன்னி முகுந்தன், தேவன், நடிகை ஷோபனா உள்ளிட்ட பலர் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பாஜகவின் பெயர் அடிபட்டுக் கிடக்கிறது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். தனது நல்ல தோழியான நடிகை ஷோபனா தான் போட்டியிடப் போவதில்லை என தொலைபேசியில் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் போட்டியிடும் சசி தரூர், பாஜகவின் வெறுப்பு அரசியல் கேரளாவில் பயனற்றது என்று கூறினார்.

 

Tags :

Share via