EPS-க்கு நயினார் நாகேந்திரன், எல். முருகன் நேரில் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி சேர்ந்துள்ளதால், அதிமுகவின் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் வியூக பயணத்துக்கு கூட்டணியாக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்நாள் பிரச்சாரத்திலும் பங்கேற்கின்றனர்.
Tags :