ரீல்ஸ் மோகம்.. கயிறு கழுத்தை இறுக்கி சிறுமி பலி

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது கயிறு கழுத்தை இறுக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தாருடன் சேர்ந்து ரீல்ஸ் எடுக்கும்போது, 2 அல்லது 3 வயதுடைய சஹஸ்ரா என்ற சிறுமியின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கயிறு இறுகியதால் சிறுமி உயிரிழந்தாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :