கேரளாவின் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வரும் - எடப்பாடி உறுதி

கேரளா நதிநீரை கட்டாயம் தமிழகத்துக்கு கொண்டு வருவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக இன்று (ஜூலை 7) முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், கோவையில் மக்களிடையே உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்ததும் கேரளாவின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவோம். விவசாயிகளின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.
Tags :